Thirumanthiram of Thirumoolar
9ம் தந்திரம் - 10. ஞானோதயம்
திருச்சிற்றம்பலம்
மனசந் தியில்கண்ட மன்நன வாகும்கனவுற ஆனந்தம் காண்டல் அதனைவினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்பஇனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1கரியட்ட கையன் கபாலம்கை யேந்திஎரியும் இளம்பிறை சூடும்எம் மானைஅரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்தக்கார் உரைத்த தவநெறியே சென்றுபுக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தைநக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றிவிளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டிவிளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்குவிளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டுதத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லைதத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளேஅசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்பசும்பொன் திகழும் படர்சடை மீதேகுசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்ஒத்துஉயர் அண்டத் துள் அமர் சோதியைஎத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்நான்என்று தான்என்று இரண்டில்லை என்பதுநான்என்ற ஞான முதல்வனே நல்கினான்நான்என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறிஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்ஞானத்தின் நன்மோன நாதாந்த வேதமே. 9உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமேஉய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமேஉய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்திஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11ஓம்எனும் ஓர்எழுத் துள்நின்ற ஓசைபோல்மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடிஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment