Thirumanthiram of Thirumoolar
9ம் தந்திரம் - 09. ஆகாசப் பேறு
திருச்சிற்றம்பலம்
உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனைஉள்ளத்து ளேயங்கி யாய ஒருவனைஉள்ளத்து ளேநீதி யாய ஒருவனைஉள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையைஉண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்ததுகொண்ட குறியைக் குலைத்தது தானே. 3பயனறு கன்னியர் போகத்தின் உள்ளேபயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதிஅயனொடு மால்அறி யாவகை நின்றிட்டுஉயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 4அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள்பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 5ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்துஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்கஉயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போதுகுயில்கொண்ட பேதை குலாவி உலாவிவெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்துஅணுகில் அகன்ற பெரும்பதி நந்திநணுகிய மின்னொளி சோதி வெளியைப்பணியின் அமுதம் பருகலும் ஆமே. 8புறத்துளா காசம் புவனம் உலகம்அகத்துளா காசம்எம் ஆதி அறிவுசிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதிசகத்துளா காசம் தானம்ச மாதியே. 9
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment