Thirumanthiram of Thirumoolar
9ம் தந்திரம் - 08.6 அற்புதக் கூத்து
திருச்சிற்றம்பலம்
குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்அருவுரு வாவது அந்த அருவேதிரிபுரை யாகித் திகழ்தரு வாளும்உருவரு வாகும் உமையவள் தானே 1திருவழி யாவது சிற்றம் பலத்தேகுருவடி வுள்ளாக்குனிக்கும் உருவேஉருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்குஅருள்வழி யாவதும் அவ்வழி தானே. 2நீரும் சிரசிடைப் பன்னிரண்டு அங்குலம்ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திடநாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்துஆடும் இடந்திரு அம்பலந் தானே. 3வளிமேகம் மின்வில்லு வானகஓசைதெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 4தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்மாயைமா மாயை கடந்துநின் றார்காணநாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. 5கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 6இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 7சத்தி வடிவு சகல ஆனந்தமும்ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டுஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 8நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளிஉற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 9அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்தெண்டினில் ஏழும் சிவாசன மாகவேகொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 10மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்நன்றிது தான்இதழ் நாலொடு நூறவைசென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுளநின்றது தான்நெடு மண்டல மாமே. 11அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடிதெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடிஎண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடிஅண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 12ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாகமாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 13அம்பல மாவது அகில சராசரம்அம்பல மாவது ஆதிப் பிரானடிஅம்பல மாவது அப்புத்தீ மண்டலம்அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 14கூடிய திண்முழ வம்குழல் ஓமென்றுஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்னநாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 15அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 16புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 17திண்டாடி வீழ்கை சிவானந்த மாவதுஉண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 18அங்கி தமருகம் அக்குமா லைபாசம்அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்தங்குஉ பயந்தரு நீல மும்உடன்மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 19ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடிநீடிய நாதம் பராற்பர நேயத்தேஆடிய நந்தி புறம்அகத் தானே. 20ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆடஅன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாடஇன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆடஅன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 21ஏழினில் ஏழாய் இகந்தெழுத்து ஏழதாய்ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாய்ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதிஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 22மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்மூன்றினில் அக்கம் முடிவாகி முந்தியேமூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. 23தாமுடி வானவர் தம்முடி மேலுறைமாமணி ஈசன் மலரடித் தாளினைவாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்காமணி ஞாலம் கடந்துநின் றானே. 24புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தைபுரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 25ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 26ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்துஅன்புறு கோணம் அசிபதத்து ஆடிடத்துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவேஅன்புறும் எந்தை நின்று ஆடலுற் றானே. 27தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்சித்தமும் ஆடச் சிவசத்தி தானாடவைத்த சராசரம் ஆட மறையாடஅத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 28இருவருங் காண எழில்அம் பலத்தேஉருவோடு அருவோடு உருபர ரூபமாய்த்திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 29சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்அவமாட ஆடாத அம்பரம் ஆடநவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 30நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்துநாதப் பிரமம் சிவநாட மாமே. 31சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 32கூடிநின் றானொரு காலத்துத் தேவர்கள்வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளிஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 33நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பிபூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்நேதத் துவமும் அவற்றோடு நேதியும்பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 34ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 35திருந்துநல் சீஎன்று உதறிய கையும்அருந்தவர் வாஎன்று அணைத்த மணிக்கையும்பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 36மருவும் துடியுடன் மன்னிய வீச்சுமருவிய அப்பும் அனலுடன் கையும்கருவின் மிதித்த கமலப் பதமும்உருவில் சிவாய நமவென வோதே. 37அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயிஅரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 38தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளிகூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப்பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே. 39நந்தியை எந்தையை ஞானத் தலைவனைமந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்துஅந்தர வானத்தின் அப்புறத்து அப்பரசுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 40சீய குருநந்தி திருஅம்ப லத்திலேஆயுறு மேனியை யாரும் அறிகிலர்தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மைஆயுறு மேனி அணைபுக லாமே. 41தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சைஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்ஆனால் அரனடி நேயத்த தாமே. 42
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment