Thirumanthiram of Thirumoolar
9ம் தந்திரம் - 08.2 சிவானந்தக் கூத்து
திருச்சிற்றம்பலம்
தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்குஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 1ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்ஆனந்தம் ஆக அகில சராசரம்ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 2ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்அளியார் சிவகாமி யாகும் சமயக்களியார் பரமும் கருத்துறை யந்தக்தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. 3ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்ஆன நடமாடி ஐங்கரு மத்தாகம்ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தேதேன்மொழி பாகன் திருநட மாடுமே. 4பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்டமூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்டதாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்துஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 5வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்பூதங்கள் ஆடப் புவனம் முழுதாடநாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 6பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 7தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்தாபதர் சத்தர் சமயம் சராசரம்யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 8திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment