Thirumanthiram of Thirumoolar
9ம் தந்திரம் - 08.4 பொற்பதிக் கூத்து
திருச்சிற்றம்பலம்
தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 1அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்அடி ஆர்பவரே அடியவர் ஆமால்அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே. 2அடங்காத என்னை அடக்கி அடிவைத்துஇடம்காண் பரானந்தத் தேஎன்னை இட்டுநடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 3உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனைஇன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 4மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனைஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 5விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 6தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்தநாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 7காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடிநீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடிநாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 8மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலைகூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடுஏறும் சுழுனை இவைசிவ பூமியே. 9பூதல மேருப் புறத்தான தெக்கணம்ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்பாதி மதியோன் பயில்திரு அம்பலம்ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment