Thirumanthiram of Thirumoolar
9ம் தந்திரம் - 01. குருமட தரிசனம்
திருச்சிற்றம்பலம்
பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பிலி எம்இறை ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3
இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 4
முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 5
அகமுக மாம்பீடம் ஆதார மாகும் சகமுக மாம்சத்தி யாதன மாகும் செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 6
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 7
No comments:
Post a Comment