Thirumanthiram of Thirumoolar
5ம் தந்திரம் - 12. தாச மார்க்கம்
திருச்சிற்றம்பலம்
எளியனல் தீப மிடல்மலர் கொய்தல் அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. 1
அதுவிது வாதிப் பரமென் றகல்வர் இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை விதிவழி யேசென்று வேந்தனை நாடு மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே. 2
அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே. 3
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக் கண்ணவ னென்று கருது மவர்கட்குப் பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே. 4
வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும் பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின் மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை நேசத் திருந்த நினைவறி யாரே. 5
No comments:
Post a Comment