Thirumanthiram of Thirumoolar
5ம் தந்திரம் - 19. நிராசாரம்
திருச்சிற்றம்பலம்
இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 2
இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. 3
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் றானுண்பர் காரறி வாளர் கலந்து பிறப்பர்கள் நீரறி வார்நெடு மாமுகி லாமே. 4
அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டுங் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே. 5
மன்னும் ஒருவன் மருவு மனோமயன் என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே. 6
ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 7
No comments:
Post a Comment