Thirumanthiram
of Thirumoolar
5ம் தந்திரம் - 04. கடுஞ் சுத்த சைவம்
திருச்சிற்றம்பலம்
வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவி ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப் பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே. 1
உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து மடலான மாமாயை மற்றுள்ள நீவப் படலான கேவல பாசந் துடைத்துத் திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே. 2
சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம் அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற் சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே. 3
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந் தானென்று நானென்ற தத்துவ நல்கலால் தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே. 4
சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால் ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும் மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும் பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 5
No comments:
Post a Comment