Thirumanthiram of Thirumoolar
பாயிரம் - 07. திருமந்திரத் தொகைச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1
வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவா யிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது வைத்த சிறப்புத் தருமிவை தானே. 2
No comments:
Post a Comment