Thirumanthiram
of Thirumoolar
7ம் தந்திரம்
- 16. பிட்சா விதி
திருச்சிற்றம்பலம்
விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1
பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில் பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப் பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. 2
பரந்துலகு ஏழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. 3
வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன் தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம் பொரஇருந் தான்புக லேபுக லாக வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. 4
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. 5
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும் கையகம் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியர் வையகம் எல்லாம் வரஇருந்தாரே. 6
No comments:
Post a Comment