Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 23. பிண்டாதித்தன்
திருச்சிற்றம்பலம்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 1
ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர் பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்தனோடே அடங்குகின் றாரே. 2
உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 3
No comments:
Post a Comment