Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 27. பசு இலக்கணம்
திருச்சிற்றம்பலம்
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் பன்னு மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 1
அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில் துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம் தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால் பின்ன மடஅன்னம் பேறணு காதே. 2
No comments:
Post a Comment