Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 31. போதன்
திருச்சிற்றம்பலம்
சீவன் எனச்சிவன் என்னவே றில்லை சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. 1
குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பல்தலை நாகம் கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 2
அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 3
ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 4
சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார் அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார் தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவம் நாடகி லாரே. 5
நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார் நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால் நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. 6
No comments:
Post a Comment