Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 28. புருடன்
திருச்சிற்றம்பலம்
வைகரி யாதியும் மாயா மலாதியும் பொய்கரி யான புருடாதி பேதமும் மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச் செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. 1
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 2
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற ஓட்டி நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 3
அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணுஅற நின்ற கலப்பது உணரார் இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித் தணிவற நின்றான் சராசரம் தானே. 4
No comments:
Post a Comment