Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
திருச்சிற்றம்பலம்
காலும் தலையும் அறியார் கலதிகள் கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர் கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே. 1
தலைஅடி யாவது அறியார் காயத்தில் தலைஅடி உச்சியில் உள்ளது மூலம் தலைஅடி யான அறிவை அறிந்தோர் தலைஅடி யாகவே தான்இருந் தாரே. 2
நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே. 3
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை அறியகி லான்ஆகில் எந்தையை யானும் அறியகி லேனே. 4
பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால் என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம் உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் சொன்னான்கழலிணை சூடிநின் றேனே. 5
பதியது தோற்றும் பதமது வைம்மின் மதியது செய்து மலர்ப்பதம் ஓதும் நதிபொதி யும்சடை நாரியோர் பாகன் கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே. 6
தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதி நாதன் கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே. 7
ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள் நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே. 8
கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப் பால்கொண்ட என்னைப் பரன்கொள்ள நாடினான் மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே. 9
பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும் குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர் பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment