Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 29. உபசாந்தம்
திருச்சிற்றம்பலம்
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. 1
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும் உப சாந்தப் பரிசிதே. 2
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத் தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. 3
ஆறாற மைந்துஆண வத்தையுள் நீக்குதல் பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. 4
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய் ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத் தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே. 5
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன் கரைகண் டானுரை அற்ற கணக்கிலே. 6
No comments:
Post a Comment