Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 24. முச்சொரூபம்
திருச்சிற்றம்பலம்
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைத்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. 1
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. 2
உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆரறி வாரே. 3
பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருவுரு வாகிக் குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. 4
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணிஎன லாய்நின்ற வாறுஅது போலத் தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. 5
கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதம் சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. 6
உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ் விடம்தரு வாசலை மேல்திற வீரே. 7
No comments:
Post a Comment