Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 19. முப்பதம்
திருச்சிற்றம்பலம்
தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன் ஆன்ற பராபர மாகும் பிறப்பற ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. 1
போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும் ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே. 2
தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும் நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம் சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே. 3
அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து கணுஒன் றிலாத சிவமும் கலந்தால் இணையறு பால்தேன் அமுதென இன்பத் துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே. 4
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 5
ஐம்பது அறியா தவரும் அவர்சிலர் உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச் செம்பர மாகிய வாசி செலுத்திடத் தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே. 6
நந்தி அறிவும் நழுவில் அதீதமாம் இந்தியம் சத்தாதி விடவிய னாகும் நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து நந்தி நனவாதி மூட்டும் அனாதியே. 7
பரதுரி யத்து நனவு படியுண்ட விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து துரிய சுழுமுனையும் ஓவும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆமே. 8
No comments:
Post a Comment