Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 22. முத்துரியம்
திருச்சிற்றம்பலம்
நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான் நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம் இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. 1
தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம் தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில் ஆனாப் பரபதம் அற்றது அருநனா வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே. 2
அணுவின் துரியத்து நான்கும துஆகிப் பணியும் பரதுரி யம்பயில் நான்கும் தணிவில் பரமாகிச் சார் முத்துரியக் கணுவில் இந் நான்கும் கலந்தவீரைந்தே. 3
ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள் நேர்அந்த மாகநெறிவழி யேசென்று பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே. 4
தொட்டே இருமின் துரிய நிலத்தினை எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப் பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள் தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே. 5
அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 6
நனவின் நனவாகி நாலாம் துரியம் தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல வினையறு சீவன் நனவாதி யாகத் தனைய பரதுரி யந்தற் பதமே. 7
தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல் நம்பிய மூன்றாம் துரியத்து நற்றாமம் அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 8
No comments:
Post a Comment