Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
திருச்சிற்றம்பலம்
செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும் பற்றும் பரோபதி ஏழும் பகருரை உற்றிடும் காரிய காரணத் தோடற அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. 1
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு வேறாய் நனவு மிகுந்த கனாநனா ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தாப் பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே. 2
அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச் சிகாரம் சிவமே வகாரம் பரமே யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 3
உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று அயிர்ப்பறு காரணோ பாதி விதிரேகத்து உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே. 4
காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொற்பதப் பாரறும் பாழில் பராபரத் தானே. 5
No comments:
Post a Comment