Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை
திருச்சிற்றம்பலம்
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. 1
ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. 2
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. 3
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. 4
திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும் வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. 5
ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வது வான தனித்தன்மை தானே. 6
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள் செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே 7
புரியும் உலகினிற் பூண்டவெட் டானை திரியுங் களிற்றொடு தேவர் குழாமும் எரியு மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே. 8
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. 9
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று மிருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவடை யோரே. 10
No comments:
Post a Comment