Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 23. மும்முத்தி
திருச்சிற்றம்பலம்
சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம் மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. 1
ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும் ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும் ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. 2
சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத் தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத் துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே. 3
சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும் பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. 4
No comments:
Post a Comment