Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 03. பிண்டலிங்கம்
திருச்சிற்றம்பலம்
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1
உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர் நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப் புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும் வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர் தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக வாயில்கொண்டு ஈசனும் ஆளவந் தானே. 3
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 4
No comments:
Post a Comment