Thirumanthiram of Thirumoolar
6ம் தந்திரம் - 09. தவவேடம்
திருச்சிற்றம்பலம்
தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1
பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2
யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன் றாகத்து நீறணி யங்கக் கபாலஞ் சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே. 3
காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4
No comments:
Post a Comment