Thirumanthiram of Thirumoolar
6ம் தந்திரம் - 11. ஞான வேடம்
திருச்சிற்றம்பலம்
ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர் ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர் ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேட நண்ணிநிற் பாரே. 1
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித் துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 2
சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரில் நவமா மவர்க்கது சாதன நான்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே. 3
சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4
அடியா ரவரே யடியா ரலாதார் அடியாரு மாகார்அவ் வேடமு மாகா அடியார் சிவஞான மானது பெற்றோர் அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 5
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந் தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம் ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. 6
ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி தானத்தில் வைத்த தனியால யத்தனாம் மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம் ஏனைத் தவசி இவனென லாகுமே. 7
தானற்ற தன்மையுந் தானவ னாதலும் ஏனைய வச்சிவ மான இயற்கையுந் தானுறு சாதக முத்திரை சாத்தலு மேனவும் நந்தி பதமுத்தி பெற்றதே. 8
No comments:
Post a Comment