Thirumanthiram of Thirumoolar
6ம் தந்திரம் - 13. அபக்குவன்
திருச்சிற்றம்பலம்
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 1
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி நினைப்பின் அதனின் நிழலையுங் காணார் வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார் புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 2
ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந் தாய்முலை யாவ தறியார் தமருளோர் ஊனிலை செய்யும் உருவிலி தானே. 3
வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின் பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 4
பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம் விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற் பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. 5
தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ் சிவத்திடை நின்றது தேவர் அறியார் தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம் பவத்திடை நின்றதோர் பாடது வாமே. 6
கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும் தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும் பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் என்றிவை இறைபால் இயற்கை அல்லவே. 7
விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார் கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே. 8
வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப் பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. 9
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான் துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான் அன்னிய னாவன் அசற்சீட னாமே. 10
No comments:
Post a Comment