Thirumanthiram of Thirumoolar
6ம் தந்திரம் - 12. சிவ வேடம்
திருச்சிற்றம்பலம்
அருளால் அரனுக் கடிமைய தாகிப் பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர் தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா உடல்கழன் றால்வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார் கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே. 2
மயலற் றிருளற்று மாமன மற்றுக் கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத் தயலற் றவரோடும் தாமே தாமாகிச் செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே. 3
ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத் தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 4
No comments:
Post a Comment