Thirumanthiram of Thirumoolar
6ம் தந்திரம் - 10. திருநீறு
திருச்சிற்றம்பலம்
நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர் ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 1
கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே. 2
அரசுட னாலத்தி யாகும்அக் காரம் விரவுகனலில் வியனுரு மாறி நிரவயன் நின்மலன் தான்பெற்ற நீதர் உருவம் பிரம உயர்குலம் ஆமே. 3
No comments:
Post a Comment