Thirumanthiram of Thirumoolar
6ம் தந்திரம் - 05. தவம்
திருச்சிற்றம்பலம்
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. 1
எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ் செம்மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லால் இம்மா தவத்தின் இயல்பறி யாரே. 2
பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகிய மாதவஞ் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. 3
இருந்து வருந்தி எழிற்றவஞ் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே இருந்திந் திரனே யெவரே வரினுந் திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 5
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும் மன்னெய்த வைத்த மனமது தானே. 6
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 7
சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. 8
தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில் தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில் தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. 9
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment