Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 05. அத்துவாக்கள்
திருச்சிற்றம்பலம்
தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1
நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும் கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. 2
சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத் தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே. 3
No comments:
Post a Comment