Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
திருச்சிற்றம்பலம்
உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன் கணுவின்றி வேதா கமநெறி காணான் பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 1
மந்திர தந்திர மாயோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர் சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 2
ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன் காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன் கோமான் அலன்அசத் தாகும் குரவனே. 3
கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால் தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும் நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 4
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர் முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின் குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. 5
No comments:
Post a Comment