Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்
திருச்சிற்றம்பலம்
அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம் முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம் கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே. 1
புருட னுடனே பொருந்திய சித்தம் அருவமொ டாறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும் அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே. 2
காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல் நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே. 3
No comments:
Post a Comment