Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 12. கலவு செலவு
திருச்சிற்றம்பலம்
கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும் செலவு விடவரு நீக்கத்துப் பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. 1
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே. 2
No comments:
Post a Comment